மலைவாழ் மக்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாணிப்பாறை ராம் நகரில் இருக்கும் மலை வாழ் மக்களுக்கென கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 122 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொது மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.
இந்த முகாமில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சப் – கலெக்டர், வருவாய்த்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் என பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி சப் – கலெக்டரிடம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு சப்-கலெக்டர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.