உக்ரைன் மீது ரஷ்யா 6 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய படைகளிடம் இருந்து உக்ரைன் படையினர் கைப்பற்றினர். இதற்கிடையில் நேற்று உக்ரைன் தலைநகரங்களில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள் அப்பாவி மக்கள் 410 பேரை படுகொலை செய்து புதைகுழியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
கீவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் கைப்பற்றியதால், அதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் ரஷ்ய படையினர் இந்த கொடூர விஷயத்தை அரங்கேற்றியுள்ளனர். அந்த வகையில் சடலங்கள் கொத்துக் கொத்தாக புதைக்கப்பட்டு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சடலங்கள் முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டிருந்தது. ரஷ்யாவின் இந்த செயலால் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் “இனப்படுகொலை” செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.