Categories
உலக செய்திகள்

இப்படி கூடவா பண்ணுவீங்க…. உக்ரைனில் பொருட்களை ஆட்டைய போட்டு…. சந்தை அமைத்து வியாபாரம் செய்த ரஷ்யப் படைகள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உக்ரைனில் உள்ள பொருள்களை ரஷ்யப் படைகள் கொள்ளையடித்ததாக நாட்டு உளவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 38 நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகரை சுற்றி உள்ள இடங்கள் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதாகவும்,  அவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டு  அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் புலனாய்வு இயக்குனரகம் கூறியதாவது, “பெலராஸ் நாட்டின் Naroulia-வில் நகரில் ரஷ்ய படைகள் திறந்தவெளி சந்தை அமைத்துள்ளனர். அங்கு உக்ரைனில் இருந்து திருடப்பட்ட நகைகள், அழகு சாதன பொருட்கள், கார்கள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்து வருவதாக” கூறியுள்ளனர்.

Categories

Tech |