Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.

அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறை 1800118797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் +91 11 23012113, 91 11 23014101, +91 11 23017905 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது..

Categories

Tech |