Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: மக்கள் அமைதியாக இருக்க உக்ரைன் அரசு வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.

அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்து வெளியேற சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நிலையில் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என உக்ரைனில் நிலவும் அவசரநிலை குறித்து அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் வயதானவர்கள் நோயுற்றவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |