Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 6 பேர் பலி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி.

ரஷ்யாவின் டெவர் நகரில் உள்ள  பாதுகாப்பு அமைச்சகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் காணாமல் போன நிலையில் தேடும் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியேறி வரும் கரும் புகைக்கு மத்தியில் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |