Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி….!! ரஷ்யாவில் தனது சேவை நிறுத்தம்…. இன்டெல் நிறுவனத்தின் அதிரடி முடிவு….!!!

உக்ரைன் போர் காரணமாக இன்டெல் நிறுவனம் தனது சேவையை ரஷ்யாவில் நிறுத்தி உள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது 42 நாளாவதாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரங்களில் ரஷ்ய படைகள் வான், ஏவுகணை, பீரங்கி தாக்குதல்களை  நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவில் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில்  நெட்பிளிக்ஸ், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், பெப்சி, கொக்கோ கோலா போன்ற குளிர் சாதன நிறுவனங்களும் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்டெல் நிறுவனம் ரஷ்யாவின் அனைத்து புதிய சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த அறிவிப்பு உடனடியாக செயலுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் நாங்கள் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி விட்டோம். மேலும் உலகளாவிய சமூகத்துடன் இணைந்து இன்டெல்  நிறுவனமும் ரஷ்ய போரினை கண்டிப்பதும், அமைதிக்கு விரைவாக திரும்ப அழைப்பு விடுப்பதிலும் செயல்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது.

Categories

Tech |