Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….!! ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடியால்…. திணறும் கென்யா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ரஷ்யாவில் பொருளாதார தடை காரணமாக கென்யா நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 43 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த நாடுகளின் பொருளாதாரம் சர்வதேச பணம் செலுத்துதல் அமைப்பு முறையிலிருந்து ரஷ்யாவை விலக்கி வைத்திருப்பதால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்பிரிக்கவின் கென்யா நாட்டில் ரஷ்யா முக்கிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யாவிற்கு கென்யாவில் இருந்து ஏஞ்ஜியோ ரோஸ் உள்ளிட்ட பல வகையான மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் பொருளாதார தடை காரணமாக கென்யாவின் உள்ள மலர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கென்யாவில் தேயிலைத் தொழிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. கென்யாவிடம் தேயிலை இருந்து 5 % ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா கென்யா நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போதைய சூழலில் அந்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 87 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |