ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தனித்து விடப்பட்டு தனியாளாக போராடி வருகிறது.
ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைனை நோட்டு அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து படையெடுத்து வருகிறது. இந்த நிலையில் தனியாளாக ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இதற்கிடையில் நோட்டா நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களது படைகளை களமிறக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நோட்டாவின் உறுப்பினராக உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் மற்ற உறுப்பினர் நாடுகள் ஆதரவு கரம் நீட்டும். இருப்பினும் உக்ரைன் நோட்டாவில் உறுப்பினர் இல்லாத நிலையில் தங்களது படைகளை போரில் நேரடியாக களமிறங்கவில்லை. இதனால் உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக தனித்து விடப்பட்டு போராடி வருகிறது.
இதற்கிடையில் சில ஆயுதங்களை உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள நாடுகள் வழங்கி வருவதாகவும் போரை நிறுத்துவதற்கு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர். இருப்பினும் அடுத்தடுத்து நடந்த இரண்டு பேச்சுவார்த்தைகளும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நிறைவடைந்தது.
இந்த நிலையில் தி கீவ் இண்டிபெண்டன்ட் பத்திர்கையாளர் நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டின் சஸ்பில்னே என்ற பொது ஊடகம் வழியாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த பேட்டியில் நோட்டா அமைப்பு எங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஏனெனில் நோட்டா அமைப்பினர் ரஷ்யாவை கண்டு உண்மையில் அச்சப்படுகிறார்கள் என்று கூறியதாக” தெரிவித்துள்ளது.