ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெரும் பென்டகன் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 43 நாளாவதாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நீண்ட காலம் நீடிக்கும் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையிலான பென்டகன் பத்திரிகையாளர் ஜான் கிர்பி கூறியதாவது, “ரஷ்யாவின் போரில் உக்ரைன் நிச்சயம் வெல்லும். ஏனெனில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதல் செய்ய திட்டத்தில் இதுவரை வெற்றி பெறவில்லை. மேலும் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு உக்ரைனுக்கு புதிய ஆயுத அமைப்புகள், டாங்குகளை தாக்கி அழிக்கும் ஜாவலின் ஏவுகணை, காமிக்கேஸி எனப்படும் ஸ்விட்சிபிளேடு டிரோன்கள் உள்ளிட்டவை அனுப்பி வைப்பது தொடர்பாகவும்” விவாதித்துள்ளார்.