Categories
உலக செய்திகள்

குடிபோதையில் இருந்த இளம்பெண்… விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

ரஷ்யாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நடந்து கொண்ட மோசமான செயல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் உள்ள சர்வதேச விமான நிலையமான Sheremetyevo Alexander S.Pushkin-ல் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது நண்பருடைய திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே அவர் குடிபோதையில் இருந்ததால் அங்குள்ள பயணி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, ஊழியர்களையும் அவமதித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரையும் அந்தப்பெண் அவதூராக பேசியுள்ளார். எனவே காவல்துறையினர் விமான நிலையத்தில் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொண்டதற்காக அந்த இளம்பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |