ரஷ்யா, நாசி வழியே செலுத்தக்கூடிய ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
கொரோனா பரவலுக்கு அவனுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மாஸ்கோவில் இருக்கும் கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தின் ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். ரஷ்யா உள்ளிட்ட 60க்கும் அதிகமான நாடுகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்கு அளித்துள்ளனர்.
மத்திய அரசு ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ரஷிய சுகாதார அமைச்சகமானது, கமலேயா மையத்திற்கு, நாசி வழியே பயன்படுத்தக்கூடிய ஸ்பிரே தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி அளித்தது.
நாசி வழியே அளிக்கப்படும் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி இது தான். இத்தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸை எதிர்த்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, இது விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது.