Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் தூதரக பணியாளர்களை வெளியேற்றுங்கள்… ரஷ்யா உத்தரவு…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரக பணியாளர்களை வெளியேற்றக் கூடிய பணியை ரஷ்யா தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை ரஷ்யா குவித்திருக்கிறது. இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள  டன்ட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை தனி நாடுகளாக அறிவிக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார்.

இதன்மூலமாக, உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யாவின் படைகள் நுழைவதற்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை புடின் வெளியிட்டிருக்கிறார். இதனிடையே, உக்ரைன் நாட்டில் அவசர நிலை அறிவிக்க, பாதுகாப்பு கவுன்சில் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் இருக்கக்கூடிய ரஷ்ய தூதரக பணியாளர்களை வெளியேற்றக்கூடிய பணியை ரஷ்யா மேற்கொண்டிருக்கிறது.

Categories

Tech |