உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யப்படை வெடி குண்டு வீசி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் நகரில் இருக்கும் அணு மின் நிலையத்தில் ரஷ்ய படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் அணுமின் நிலையம் சேதமடைந்ததாக அம்மாநிலத்தினுடைய அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் கூறியிருக்கிறார்.
மேலும், ரஷ்யா மேற்கொண்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில், அணுமின் நிலைய தளத்தின் கட்டிடங்களும், உள்கட்டமைப்புகளும் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.