Categories
உலக செய்திகள்

உக்ரைன் எஃகு உருக்கு ஆலையில்… உக்ரைன் படைகள் மீது தாக்குதல்….!!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருக்கும் எஃகு உருக்கு ஆலையான அசோவ்ஸ்டலில்  உக்ரைன் படைகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, இரண்டு மாதங்களாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.  இதனிடையே அந்நாட்டின் மரியுபோல் நகரில் இருக்கும் அசோவ்ஸ்டல் என்ற எஃக் உருக்கு ஆலை பகுதியில் உக்ரைன் படைகள் நிறுத்தப்பட்டிருந்துள்ளனர். அப்போது, ரஷ்யப்படை அங்கு நின்ற உக்ரைன் படையினரை நோக்கி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை உக்ரைன் நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் அலெக்சாண்டர் ஸ்டுபுன் கூறியிருக்கிறார். நேற்று ஒரே நாளில் லுஹன்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய இரு பகுதிகளில் ரஷ்ய படை மேற்கொண்ட தாக்குதல்களை ஏழு தடவை உக்ரைன் படை முறியடித்தது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |