ரஷ்யாவில் முகநூல் தளத்தை தொடர்ந்து ட்விட்டர் செயலிக்கும் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து பத்தாவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, உலக நாடுகள், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன.
இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனங்கள், உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியிடுகின்றன. எனவே, முகநூல் தளம், ஐரோப்பாவில் ரஷ்ய அரசு ஊடகங்கங்கள் ஒளிபரப்படுவதற்கு தடை விதித்தது. இதனால், முகநூல் செயலியை தடை செய்த ரஷ்ய அரசு, தற்போது ட்விட்டர் செயலியையும் தடை செய்திருக்கிறது.