Categories
உலக செய்திகள்

உக்ரைன் சென்ற போரிஸ் ஜான்சன்…. இனி ரஷ்யாவிற்குள் நுழைய முடியாது… புடின் அதிரடி தடை…!!!

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை நேரடியாக சந்தித்து பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 50 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உறுதுணையாக இருக்கின்றன. ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்திருக்கிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு புடின் தடை விதித்தார். இங்கிலாந்து, உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவியளித்து வருகிறது. இது மட்டுமல்லாமல், சமீபத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் நாட்டிற்கு சென்று அந்நாட்டு அதிபரை நேரடியாக சந்தித்திருக்கிறார். இதனால் தான் பிரதமர் போரிஸ்  ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |