பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் போன்ற 13 நபர்களுக்கு ரஷ்யா பயணத் தடை அறிவித்திருக்கிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து ரஷ்யா, போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் வர பயணத்தடை விதித்தது. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சத்தின் அறிக்கையில், உக்ரைன் பிரச்சினையில் தற்போது வரை இல்லாத வகையில் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த 13 அரசியல் தலைவர்களுக்கு தங்கள் நாட்டிற்கு வர தடை விதிக்கப்படுகிறது.
அந்நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக், அட்டா்னி ஜெனரல் சுயெல்லா பிராவோ்மன், துணை பிரதமரான டோமினிக் ராப், உள்துறை அமைச்சரான பிரீத்தி படேல், வெளியுறவுத் துறை இணையமைச்சரான லிஸ் டிரஸ் போன்றோர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இன்னும் அரசியல்வாதிகள் சிலர் விரைவாக இந்த பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.