Categories
உலக செய்திகள்

உக்ரைனின் மற்றொரு முக்கிய நகரும் கைப்பற்றப்பட்டது… ரஷ்யா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரை நாட்டின் லுஹான்ஸ்க் என்னும் மாகாணத்தின் அனைத்து நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து விட்ட நிலையில், தற்போது கடைசியாக இருந்த லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத கடைசியில் போர் தொடுக்க தொடங்கியது. எனினும், தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் லுஹான்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் முக்கியமான பல நகர்களை ரஷ்யா இதற்கு முன்பே கைப்பற்றி விட்டது.

இந்நிலையில், அந்த மாகாணத்தில் கடைசியாக இருந்த லிசிசான்ஸ்க் என்ற முக்கிய நகரையும் ரஷ்யா தற்போது ஆக்கிரமித்துவிட்டது என்று அதிபர் விளாடிமிர் புடினிடம் ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி கூறியிருக்கிறார்.

Categories

Tech |