Categories
உலக செய்திகள்

சர்வதேச விமான சேவை மீண்டும் இயக்கம்.. ரஷ்யா வெளியிட்ட தகவல்..!!

ரஷ்யா வரும் 10 ஆம் தேதியிலிருந்து, குறிப்பிட்ட நாடுகளில் சர்வதேச விமான சேவையை மீண்டும் செயல்படுத்த தீர்மானித்துள்ளது.  

உலக நாடுகளில் கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ரஷ்யா உட்பட பல நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்திருந்தன. இந்நிலையில் ரஷ்ய அரசு வரும் பத்தாம் தேதியிலிருந்து, லெபனான், ஹங்கேரி, லக்சம்பர்க், மொரீசியஸ், ஆஸ்திரியா குரோசியா, மொரோக்கோ மற்றும் அல்பேனியா போன்ற சர்வதேச விமான சேவையை திரும்ப செயல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி, மொராக்கோவின் ரபாத்-மாஸ்கோ செல்லக்கூடிய விமானம், மொரீசியஸின் போர்ட் லூயிஸ்-மாஸ்கோ செல்லக்கூடிய விமானம், ஹங்கேரியின் புடாபெஸ்ட்-மாஸ்கோ செல்லக்கூடிய விமானம், குரோசியாவின் ஜக்ரெப்-மாஸ்கோ செல்லக்கூடிய  விமானம் மற்றும் ஆஸ்திரியாவின் வியன்னா-மாஸ்கோ செல்லக்கூடிய விமானம் போன்றவை வாரத்திற்கு இரண்டு தடவை செயல்படவுள்ளன.
லக்சம்பர்க்கின் லக்சம்பர்க்-மாஸ்கோ செல்லக்கூடிய விமானம், லெபனானின் பெய்ரூட்-மாஸ்கோ செல்லக்கூடிய விமானம், அல்பேனியாவின் திரானா-மாஸ்கோ செல்லக்கூடிய சார்ட்டர்டு விமானம் போன்றவை வாரத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் செயல்படவுள்ளன.

Categories

Tech |