ரஷ்யா இன்று உக்ரைனின் ராணுவத் தொழிற்சாலையை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
மாஸ்கோ தனது தாக்குதலை உக்ரைன் தலைநகர் மீது தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கியேவுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவ ஆலையைத் தாக்கியதாக இன்று அறிவித்துள்ளது. “இரவில் உயர் துல்லியமான காற்றில் ஏவப்பட்ட ஏவுகணைகள் கீவ் மாநிலத்தின் Brovary குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலையை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. . இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் “சில உள்கட்டமைப்பு பொருட்கள் தாக்கப்பட்டன” என்று ப்ரோவரியின் மேயர் Igor Sapozhko கூறியுள்ளார்.
இருப்பீனும், அந்த இடங்களில் எந்த ஒரு அழிவு, புகை அல்லது தீ போன்ற அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று ப்ரோவரியில் உள்ள AFP பத்திரிகையாளர் கூறியுள்ளார். இதற்கிடையில் கீவ் நகரம் மற்றும் அதற்கு வெளியே உள்ள இராணுவ ஆலைகள் மீது ரஷ்யா சில நாட்களாகவே பல தாக்குதல்களை நடத்தியது. மேலும் கடந்த மாதம் கிழக்கு Donbas பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதில் கவனம் செலுத்துவதற்காக வடக்கு உக்ரைன் தலைநகரங்களை சுற்றி இருந்து வீரர்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா கூறியது குறிப்பிடத்தக்கது.