உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானிய பொருட்களை நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை என்று விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார்.
ரஷ்ய நாட்டின் ஒரு தொலைக்காட்சியில் விளாடிமிர் புடின் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் தானிய ஏற்றுமதியில் நாங்கள் எப்போதும் தலையிட்டதில்லை. அந்நாட்டில் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகங்களின் வழியாக ஏற்றுமதி செய்யலாம்.
அந்நாட்டின் துறைமுகங்களில் இருக்கும் கண்ணிவெடியை நீக்கும் சமயத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ளாது. இதனை முன்பே கூறிவிட்டேன். அமைதியாக எடுத்துச் செல்வதற்கும் அசோவ், கருங்கடல்களில் பாதுகாப்பான முறையில் கப்பல்கள் செல்வதையும் உறுதி செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பு உக்ரைனில் உள்ள தானியங்களை ரஷ்யா கொள்ளையடித்து பிற நாடுகளுக்கு விற்பனை செய்வதாக துருக்கி நாட்டின் தூதர் குற்றம்சாட்டியிருந்தார்.