ஜி-7 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், ரஷ்யாவின் எரிவாயு மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்து பற்றி ஆய்வு செய்ய மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் எண்ணெய் விலைக்கான வரம்பை ஆய்வு செய்ய ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. மேலும், ரஷ்ய நாட்டின் எண்ணெய் மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆராய்வதற்காக பிற நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட ரஷ்யாவின் எண்ணையை எடுத்து செல்ல தடை அறிவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதுபற்றி, வெள்ளை மாளிகையின் செய்தி பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாவது, இந்தியா உட்பட சில நாடுகளுடன் ரஷ்யாவின் எரிவாயு மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தற்போது இந்திய நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.