ரஷ்யாவின் படைகள் படையெடுக்க தீவிரமாகி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான படைகளும், ஆபத்து நிறைந்த ஆயுதங்களும் உக்ரைன் எல்லைக்கு அருகே குவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க உளவுத்துறையானது, உக்ரைன் எல்லைக்கு அருகே குவிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்ததுடன், அங்கு சுமார் 1,00,000 வீரர்கள் குவிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், பெலாரஸ் நிர்வாகம் அகதிகளை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு, ரஷ்ய நாட்டின் நிலை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், நேட்டோ அமைப்பிற்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனினும், இரவு சமயத்தில், ரஷ்யப்படை உக்ரைனில் இருக்கும் கிரிமியா என்ற பகுதியில் குவிந்துள்ளது. மேலும், உக்ரைன் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முழுவதுமாக ரஷ்யா ரத்து செய்துள்ள நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த, ரஷ்யா மின்சாரத்தை துண்டிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், ரஷ்யாவின் உளவுத்துறை, தடுப்பூசியை எதிர்ப்பவர்களை வைத்து, உக்ரைன் நாட்டின் தலைநகரில் போராட்டங்களை நடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கவுள்ள ரஷ்ய நாட்டு படைகள், Kursk, Yelnya, மற்றும் Bryansk போன்ற எல்லையோர நகரங்களில் முகாமிட்டிருக்கிறார்கள். இதற்காக 300 மைல்கள் தூரத்தில் இருக்கும் ரஷ்ய- உக்ரைனின் எல்லைப்பகுதிக்கு, உக்ரைன் சுமார் 8,500 வீரர்கள் அனுப்பியிருக்கிறது.