Categories
தேசிய செய்திகள்

“சுய சார்பை ரஷ்யா வெளிக்காட்டியுள்ளது”… சஞ்சய் ராவத் கூற்று… !!

தடுப்பூசி மூலம் சுயசார்பை ரஷியா வெளிப்படுத்தியுள்ளது என சிவ சேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாக ரஷியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஆனால் இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் பரிசோதனைகளில் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். சுயசார்பு இந்தியா என்று நாம் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தடுப்பூசி கண்டுபிடித்து சுயசார்பை ரஷியா காண்பித்து விட்டது என்று சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இது பற்றி சிவ சேனாவில் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘உலகமே ரஷியா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி சட்டப்பூர்வமானது அல்ல என நிரூபிக்க துடிக்கின்றன. ஆனால் ரசியா அதிபர் புதின் தடுப்பூசி பரிசோதனைக்காக தனது மகள் உடலில் செலுத்தியுள்ளார். இதன் மூலும் தனது நாட்டு மக்களுக்கு சுய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

உலகிற்கு சுயசார்பு குறித்து ரஷியா முதல் பாடத்தை கொடுத்துள்ளது. நாம் இன்னும் சுயசார்பு குறித்து பேசிக் கொண்டிருக்கிறொம்.’’ என்று விமர்சித்தார். சுய-சார்பு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் சஞ்சய் ராவத்  இவ்வாறு கூறியுள்ளார்.

 

Categories

Tech |