ரஷ்யப்படையினரின் ஆயுதங்களே அவர்களுக்கு எதிராக மாறியுள்ளது.
உக்ரைன் நாட்டின் Kyiv என்ற நகரத்திற்கு 40 மைல்கள் தூரத்தில் இருக்கும் Rudnytske என்ற சிறிய கிராமத்தை ரஷ்ய படைகளிடமிருந்து உக்ரைன் மீட்டுவிட்டது. அங்கு ரஷ்ய படை, 3 tank-கள், ஆயுதமேந்திய ஒரு கனரக வாகனத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதேபோன்று ரஷ்ய படையினர் கைப்பற்றிய Irpin நகரத்தையும் உக்ரைன் மீட்டு விட்டது.
அந்த பகுதியிலும் BMD-4M என்ற ராணுவத்தில் புகழ்வாய்ந்த ஒரு போர் வாகனத்தை அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர். தற்போது உக்ரைன் படையினர் ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையே அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருக்கிறார்கள்.
உக்ரைன் படை, ரஷ்ய வீரர்கள் விட்டுச் சென்ற, 120 tanks உள்பட ஏறக்குறைய 1,000 இராணுவ ஆயுதங்களை வைத்திருப்பதாக Yuri Butusov என்ற உக்ரைன் நாட்டின் இராணுவ ஊடகவியலாளர் கூறியிருக்கிறார்.