Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பல்- ஜப்பான் கப்பல் நடுக்கடலில் மோதி பயங்கர விபத்து.. மூவர் பலியான சோகம்..!!

ரஷ்ய கப்பல், ஜப்பான் கப்பல் மீது மோதி நடுக்கடலில் பயங்கர விபத்து ஏற்பட்டு, மூவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஜப்பான் Hokkaido-வின் Monbetsu என்ற நகரத்தின் துரைமுகத்திலிருந்து, சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில், ரஷ்யாவின் Amur வணிக கப்பல், ஜப்பானின் Daihachi Hokkoumaru என்ற மீன்பிடி கப்பல் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மீன்பிடி கப்பலில் 5 நபர்களும், ரஷ்ய  கப்பலில் 23 நபர்களும் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஜப்பான் கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்துவிட்டது. இதில் கப்பலில் இருந்த 5 நபர்களும் கடலில் விழுந்து போராடிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை ரஷ்ய கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டதோடு ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள்  மூவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில் Sapporo-வில் இருக்கும் ரஷ்ய துணை தூதர் Sergei Marin, கடுமையான மூடு பனியினால் ஜப்பானின் சிறிய கப்பல், ரஷ்ய கப்பல் குழுவினருக்கு தெரிந்திருக்காது.

இதனால் தான் விபத்து நேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் கரையிலிருந்து நீண்ட தூரம் ஜப்பான் கப்பல் வர வேண்டிய தேவையில்லை. ரஷ்ய கப்பலின் கேப்டன் துரிதமாக  செயல்பட்டு, விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக கப்பலை நிறுத்தியதுடன் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் ஜப்பான் கப்பலில் இருந்த 5 நபர்களும் மீட்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |