Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….!! போர் கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா…. நமது நம்பிக்கை என உருக்கம்…..!!!

ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலின் அஞ்சலி செலுத்தும் விழா இன்று நடைபெற்றது.

ரஷ்யாவின் அதிபயங்கர மற்றும் கருங்கடலை ஆட்சி செய்த முதன்மை கடற்படைக் கப்பலாக மாஸ்க்வா விளங்கியது. மேலும் சோவியத் காலத்தில் மாஸ்க்வா கப்பல் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வழிநடத்தும் முக்கிய பணிகளை செய்து வந்திருந்தது. இதற்கிடையில் மாஸ்க்வா கப்பலில் ஏற்பட்ட வெடிமருந்து வெடிப்பு காரணமாக பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் கப்பலை கரைக்கு இழுத்து வந்த போதும் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் மூழ்கியது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா வெடிமருந்து வெடித்ததாள் தான் கப்பல் சேதம் அடைந்தது என தெரிவித்திருந்த நிலையில் உக்கிரைன் தனது நாட்டு ராணுவம் நடத்திய கப்பல் தடுப்பு ஏவுகணைத் தாக்குதலில் தான் கப்பல் சேதமடைந்ததாக தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் சோவியத் கால மாஸ்க்வா வியாழக்கிழமை தண்ணீரில் மூழ்கியது தொடர்ந்து அதற்கு அஞ்சலி தெரிவிக்கும் விழா ரஷ்யாவின் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய கேப்டன் செர்ஜி கோர்பச்சேவ் மாஸ்க்வா நமது அடையாளம், சத்தியின் உருவம், நம்பிக்கை மற்றும் 90 களின் கடற்படையின் மறுமலர்ச்சி என புகழ்ந்து உரையாற்றினார். மேலும் கப்பலுக்கு அஞ்சலி வழங்கிய பாதிரியார் மாஸ்க்வா இழப்பு கப்பலில் 20 வருடங்களாக வேலை செய்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு மிகப்பெரிய துன்பத்தை தந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |