Categories
உலக செய்திகள்

“அமைதியா…? அதுக்கு வாய்ப்பே இல்ல”…. ரஷ்ய அதிபர் அதிரடி… உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்…!!!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டுடனான பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறியிருக்கிறார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே தற்போது போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து ஐந்து நபர்கள் ரஷ்யாவிற்கு ஊடுருவ முயற்சித்ததால்  அவர்களை சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படை எடுக்க அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டுடனான பிரச்சனையை அமைதி வழியில் தீர்ப்பதற்கு எந்தவித வாய்ப்புகளும் கிடையாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

இதனால் உக்ரைனில் போர் ஏற்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. எனவே, எல்லைப் பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |