Categories
உலக செய்திகள்

ஜெய்சங்கர் அதிக நாட்டுப்பற்று கொண்டவர்… புகழ்ந்து தள்ளிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…!!!

ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்கய் லாவ்ரோவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டுப் பற்று அதிகம் கொண்டவர் என்று கூறியிருக்கிறார்.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த ஒரு நேர்காணலில், இந்தியா தன் சொந்தமான வெளியுறவு கொள்கைகளைத் தான்  பின்பற்றும் என்று ஜெய்சங்கர் தெரிவித்ததை வரவேற்றிருக்கிறார். ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதிகளை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியது.

ஆனால் இந்தியா தன் வெளியுறவு கொள்கைகளை மட்டும் தான் கடைபிடிக்கும் என்று உறுதியாக தெரிவித்ததை குறிப்பிட்டுள்ளார். தன் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு எது அவசியமானது? என இந்தியா கருதுகின்றதோ, அதற்கு தகுந்த தீர்மானங்களை சுயமாக மேற்கொள்ளும் என்று ஜெய்சங்கர் தெரிவித்ததை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் மேற்கத்திய நாடுகளை நம்பாமல், ஐ.நா விதி முறைகளுக்கு மதிப்பு கொடுத்து நடக்கும் நட்பு நாடுகளுக்கு தான் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்கும், இந்தியா அப்படிப்பட்ட நாடு என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |