Categories
உலக செய்திகள்

இந்த நிலை ஏற்படுமா..? ரஷ்ய ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்வி… சிரிப்பலையை உண்டாக்கிய பதில்..!!

ரஷ்ய ஜனாதிபதியிடம் லண்டன் விமானமானது அரசியல் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு கடத்தும் நிலை ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றம் சார்பில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அப்போது பெலாரஸ் ஜனாதிபதி பயணிகள் விமானம் ஒன்றை அரசியல் எதிரியை கைது செய்யும் பொருட்டு வலுக்கட்டாயமாக தரையிரக்கப்பட்டத்தை ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதோடு ரஷ்யாவிற்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தாய்லாந்துக்கு லண்டனில் இருந்து செல்லும் விமானமானது ரஷ்யாவால் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்படுமா என்று கேள்வி கேட்கப்பட்டபோது ரஷ்ய ஜனாதிபதி அ ந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் மத்தியில் இந்த பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமது அரசு மீதான கடும் விமர்சனங்களை முன்வைத்த பத்திரிக்கையாளரை பெலாரஸ் ஜனாதிபதி வலுக்கட்டாயமாக பயணிகள் விமானத்தில் இருந்து தரையிறக்கி கைதுசெய்தது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் பெலாரஸ் மீது பறக்காது என்று தீர்மானிக்கப்பட்டதோடு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெலாரஸ் மீது பொருளாதார தடைகளும் விதிக்கும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது. ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் ளுக்காஷென்கோ மிக நெருக்கமான நட்பு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |