Categories
உலக செய்திகள்

“தீவிரவாதத்திற்கும் கடத்தலுக்கும் ஆதாரம் ஆப்கானிஸ்தான்!”.. பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர்..!!

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான், தீவிரவாதத்திற்கும் போதை பொருள் கடத்துவதற்கும் ஆதாரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் சேர்ந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை தோற்றுவித்தது. இந்நிலையில், இன்று நடந்த இம்மாநாட்டில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா, சீன நாட்டின் அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, போன்றோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

அப்போது மாநாட்டில் பேசிய, ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான் நாடு தீவிரவாதத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்நாடு, அவர்களின் பக்கத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது என்றார். மேலும், அடுத்து வரும் 15 வருடங்களில் பிரிக்ஸ் கூட்டமைப்பு, மிகுந்த உற்பத்தி திறன் உடையதாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |