Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஆணு ஆயுத பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்!”.. ரஷ்ய அதிபர் நம்பிக்கை..!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு சரியான முடிவு கண்டறியப்படும் என்று தெரிவித்துள்ளார். 

வடகொரியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முடிவுகளை மீறி, சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் அடிக்கடி சோதித்து வருகிறது. எனவே ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இவற்றை முழுவதுமாக தடுத்து கொரிய தீபகற்பத்தை, அணு ஆயுதமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

எனவே வட கொரியாவிற்கும், குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கும் இடையே பல நாட்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகொரியாவின் நட்பு நாடான ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு சரியான முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யா மற்றும் பிற நாடுகளும் வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர நல்ல வழியை கண்டறிய வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் மூலமாக இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |