ரஷ்யா ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட இளம்பெண்ணுக்கு ரவுடி கும்பலின் தலைவருடன் காதல் மலர்ந்துள்ளது.
ரஷ்யா நாட்டின் இராணுவத்தினால் Aliia Roza என்ற 19 வயது இளம்பெண் பிரபல ரவுடி கும்பலின் தலைவனிடமிருந்து ரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தின் தலைவரான Vladimir என்பவரை உண்மையாகவே Aliia காதலிக்க தொடங்கியுள்ளார். இதனை அடுத்து Aliia Roza ஒரு ராணுவ வீராங்கனை எனவும் தங்களை உளவு பார்க்க தான் வந்துள்ளார் என்றும் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை கண்டுபிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து Aliia Rozaவை ஒரு காட்டுக்குள் இழுத்துச் சென்று 10 பேர் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்பொழுது கூட்டத்தின் தலைவனான Vladimir அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
அதனால் Vladimir ரை அவரின் கூட்டமே கொன்று விட்டனர். இந்த நிலையில் ரஷ்யா ராணுவமும் இவர்களின் காதலை பற்றி தெரிந்து கொண்டனர். இதனால் இருவரும் வசமாக சிக்கினர். மேலும் Vladimir இறப்பதற்கு முன் Aliiaவிடம் சிலரது முகவரிகளை கொடுத்து அவர்களை சென்று சந்திக்கும் படி கூறியுள்ளார். இதன் பிறகு Aliia அவர்களை சந்தித்து நாளடைவில் சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, போன்ற நாடுகளை சுற்றி இறுதியில் ஃபேஷன் நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்துகிறார். இப்பொழுது Aliia இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு நிகராக உயர்ந்துள்ளார்.
இருந்த போதிலும் அவரால் தன் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தன் பெற்றோரை வெளிநாடுகளில் வைத்து சந்தித்து வருகிறார். தற்பொழுது Aliia அவர்களுக்கு 36 வயதான நிலையில் தனது இளமைக் காலம் குறித்து நினைவு கூறும் போது அவர் கூறியதில் “ராணுவத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே தனது சக ராணுவ வீரர்களால் வன்முறைக்கு ஆளானதாகவும் அதனை Vladimirக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறினார். குறிப்பாக ரஷ்யாவை பொறுத்தவரை அங்கு போலீசாரை விட குற்றவாளிகளே மேல். ஏனெனில் போலீசாருக்கு என்று எந்த கொள்கைகளும் கிடையாது. ஆனால் குற்றவாளிகள் தங்கள் குடும்பத்தினரையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் கொள்கை உடையவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.