Categories
உலக செய்திகள்

எண்ணெய் விலை வரம்பை நிர்ணயித்த ஐரோப்பிய ஒன்றியம்… நிராகரித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணையின் விலை வரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து ஜி7 இல் உறுப்பினர்களாக இருக்கும் பணக்கார நாடுகள் இந்த விலையை நிர்ணயம் செய்திருக்கின்றன. மேலும் ரஷ்ய நாட்டிலிருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் எண்ணெய் தடையில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முடிவிற்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது. உக்ரைனில் போர் தொடங்கிய பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 நாடுகள் ரஷ்ய நாட்டிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்கு தடை அறிவித்தன. இந்நிலையில் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இந்த விலை வரம்பு ரஷ்யாவிற்கு கிடைக்கும் வருவாயை கட்டுப்படுத்துவதற்கான கருவியாக அமைந்திருக்கிறது.

மேலும், குறைவான, நடுத்தர வருவாய் இருக்கும் நாடுகளுக்கு சரியாக எண்ணெய் கிடைக்க வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயம் செய்த எண்ணெய் விலை வரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |