Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானிற்கு கச்சா எண்ணெய் கிடையாது…. மறுப்பு தெரிவித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, பாகிஸ்தான் நாட்டிற்கு கச்சா எண்ணையை குறைவான விலையில் கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா பல மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள், எண்ணெய் போன்ற எரிபொருட்களை ரஷ்ய நாட்டிடமிருந்து வாங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தன. எனவே ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சில நாடுகள் நிறுத்திவிட்டது.

இதனால், நஷ்டமடைந்த ரஷ்ய அரசு குறைவான விலையில் கச்சா எண்ணையை வழங்க தீர்மானித்தது. அதன் பிறகு, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்ய நாட்டிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணையை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றன. இதனிடையே இந்தியாவைப் போன்று தங்களுக்கும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணையை வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான், ரஷ்யாவிடம் கோரிக்கை வைத்தது.

இதற்காக அந்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூன்று நாட்கள் பயணமாக மாஸ்கோவிற்கு சென்றார்கள். கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று இது தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணையை பாகிஸ்தான் நாட்டிற்கு கொடுக்க ரஷ்யா மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |