உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா, சீனாவிடம் ட்ரோன்கள் கேட்டதால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்திருக்கிறது.
ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்று கூறி வந்த ஜோபைடன் அரசுக்கு தற்போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, சீனாவிடம் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை அதிகரிப்பதற்காக ட்ரோன்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் இருக்கும் சீனாவின் ஒரு தூதரக அதிகாரி, இந்த பிரச்சனையில் சீனா பற்றி அமெரிக்கா தவறான தகவல்களை பரப்பி வருகிறது. உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் சமாதான பேச்சு வார்த்தைகளை நடத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
3-ஆம் வாரமாக தொடர்ந்துகொண்டிருக்கும் போரை நிறுத்த சீனா, அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறிவருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட ஆலோசகர்களும், ரஷ்ய நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய, ஆசிய கூட்டணி நாடுகளும் விதித்த பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்துமாறு, சீன அரசிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.