Categories
உலக செய்திகள்

கடைசி நிமிடத்தில்… அமெரிக்க வங்கிக்கு கடனை செலுத்திய ரஷ்யா…!!!

ரஷ்யா, அமெரிக்க வங்கியில் பெற்ற கடனை கடைசி தேதி முடியப்போகும் கடைசி நிமிடத்தில் திரும்ப செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் நிதி அமைச்சக அதிகாரிகள், ரஷ்யா பெற்ற கடனை மீண்டும் செலுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் எந்த வங்கியில் செலுத்தினார்கள், எவ்வளவு தொகை போன்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பே, அமெரிக்க நாட்டின் ஜேபிமோா்கன் சேஸ் என்ற வங்கிக்கு கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதிக்கு முன்பாக 64.9 கோடி டாலரை ரஷ்யா செலுத்த தயாராக இருந்தது.

ஆனால், உக்ரைன் போரால் அந்நாட்டிற்கு பொருளாதாரத்தடைகள் அறிவிக்கப்பட்டது. எனவே,  கடனை டாலராக செலுத்த முடியாமல், ரூபிளில் வழங்குவதாக ரஷ்யா தெரிவித்தது. ஆனால், அந்தத் தொகையை டாலராக மாற்ற கூடுதலாக 1 மாத காலம் அவகாசம் இருந்தது. எனவே, வங்கி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், ரஷ்யா அந்த கடனை டாலராக மாற்றி செலுத்திவிட்டது என்று அமெரிக்காவை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |