Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி ஒமிக்ரானுக்கு முடிவு கட்டுமா…? “இன்னும் 10 நாள் தான்”…. ரஷ்யா வெளியிட்ட மாஸ் தகவல்….!!

ரஷ்யா இன்னும் 10 நாட்களில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா என்பது குறித்த ஆய்வின் முடிவினை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சுமார் 30 ஆயிரம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 16 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா இன்னும் 10 நாட்களில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா ? என்பது குறித்த ஆய்வின் முடிவினை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் தேசிய நோய் பரவல் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |