Categories
உலக செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் தலைநகரை ஆக்கிரமித்து விடும்…. எச்சரிக்கும் அதிபர் ஜோ பைடன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின்மீது போர் தடுப்பதற்காக தவறான தகவல்களை வழங்குவதாக ஜோபைடன் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்ததாவது, மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக ரஷ்ய மக்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இராணுவ வீரர்கள் 40% பேர், உக்ரைன் நாட்டின்  எல்லை பகுதியில் குவிந்திருக்கிறார்கள்.

கடந்த வாரத்தில், ரஷ்யா சில படைகளை வாபஸ் வாங்கி விட்டது. எனினும், தற்போது அங்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் படைகள் போருக்கு தயாராக இருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது இன்னும் சில நாட்களில் தாக்குதலை தொடங்கும். எனவே, உக்ரைன் நாட்டின் தலைநகர் கையிவ்வை விரைவாக ரஷ்யா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடும்.

இன்னும் நாட்கள் இருக்கிறது. ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின், அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தலாம். இதில், உக்ரைன் நாட்டின் அதிபரான வோலோடிமிர் செலென்ஸ்கி, இந்த வாரத்தில் முனிச் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வதில் விருப்பமாக இருக்கிறார்.

அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு உதவியாக இருக்கும். ரஷ்ய நாட்டின் மீது கடும் நடவடிக்கைகளும் தடைகளும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறி இருக்கிறார்.

Categories

Tech |