ரஷ்யா கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகிறார்.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் எல்லை வடகிழக்கு அருகே ரஷ்ய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யா தீவிர முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகின்றது. அதனால் ரஷ்ய எல்லைகளில் உக்ரைன் படைகளை குவித்து வருகின்றது. இதனைக் காரணமாகக் கொண்டு ரஷ்யாவும் தன் பங்கிற்கு உக்ரைனுக்கு எதிராக படைகளை குவித்துள்ளது. வடகிழக்கு எல்லையில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இராணுவ பயிற்சி பதற்றத்தை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை விரைவாக கருங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டம் தீட்டியுள்ளது. அமெரிக்கா வழக்கமாக கருங்கடலில் கடற்படை பயிற்சி மேற்கொள்ளும் ஆனால் இப்போது போர்கப்பல்களை அனுப்புவது, ரஷ்யாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிப்பதை குறிக்கிறது. அதன்பின் ரஷ்யக் கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச வான்வெளியில் உலக கண்காணிப்பு விமானங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.