ரஷ்ய அதிபர், ஜெர்மன் பிரதமரிடமும், பிரான்ஸ் அதிபரிடமும் தனித்தனியாக தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். ரஷ்ய அதிபரின் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதால் பாதிப்படைந்த பகுதிகளில் மனிதாபிமான நிலைகள் பற்றி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
விளாடிமிர் புடின், அவர்கள் இருவருக்கும் உக்ரைன் நாட்டின் கலவர நிலை தொடர்பில் விளக்கினார். மேலும், உக்ரைன் ரஷ்யா இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றியும் தெரிவித்தார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் இந்த நெருக்கடி சூழ்நிலைக்கு தூதரக ரீதியாக முடிவு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.