கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு உலக நாடுகள் முழுவதும் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் வெற்றிபெற ரஷ்யா மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ள கமேலியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளது. தடுப்பு மருந்தின் அனைத்து பரிசோதனைகளையும் முடிவு செய்துவிட்டதாகவும், இறுதி ஒப்புதலை பெற காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அதோடு அந்நாட்டில் ராணுவத்தினர் பலர் சோதனை முயற்சியில் தங்களை உட்படுத்திக் கொண்டனர். பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட ராணுவ வீரர்கள் நலமாக இருப்பதாகவே ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு அவர்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்றும் கூறியுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் கண்டறியப்பட்டுள்ள தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த தடுப்பு மருந்து ஒப்புதல் கிடைத்த பிறகு சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு முதல்கட்டமாக செலுத்தப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இத்தகைய தகவலை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பயத்துடனே பார்க்கின்றன. அதோடு பாதுகாப்பு காரணமாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தடுப்பு மருந்தை அமெரிக்கா பயன்படுத்தாது என அமெரிக்க நிபுணர் அந்தோணி பாசி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.