ரஷ்ய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தால், அதன் விலை இரு மடங்காக அதிகரிக்கும் என்று உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. மேலும் கடும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாடுகள் திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கத்திய நாடுகள் தடை செய்தால், உலக அளவில் அதன் விலை பீப்பாய்க்கு 300 டாலராக அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுகுறித்து ரஷ்ய துணைப் பிரதமரான அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டால் உலக அளவில் சந்தை கடும் விளைவுகளை எதிர் கொள்ளும்.
இதன் மூலம், இரண்டு மடங்காக விலை உயர்ந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 300-ஆக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், ஜெர்மன் நாட்டிற்கான முக்கிய எரிவாயு குழாய் திட்டம் அடைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.