ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமானது பிரிட்டன் போர்க்கப்பல் தங்களின் எல்லையை தாண்டியதால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது.
கருங்கடலில் வடமேற்கு பகுதியில் இன்று காலையில் சுமார் 11:52 மணியளவில், HMS Defender என்ற பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் போர்க்கப்பல், எல்லையை தாண்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யாவின் Cape Fiolent பிராந்தியத்தில் புகுந்துள்ளது. இதனைதொடர்ந்து ரஷ்ய போர்க் கப்பல், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி எச்சரித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் போர் விமானமான Su-24M, கடற்படையின் நடவடிக்கைகளுடன் வெடிகுண்டு வீசியுள்ளது. அதன்பின்பு ரஷ்யாவின் எல்லையைவிட்டு, பிரிட்டிஷ் போர்க்கப்பல் சென்றுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், மாஸ்கோவில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.