Categories
உலக செய்திகள்

கார்கிவ் நகரில் புகுந்த ரஷ்ய வான்வழிப்படைகள்…. மருத்துவமனை மீது தாக்குதல்…!!!

உக்ரைன் ராணுவம், கார்கிவ் பகுதியில் ரஷ்ய வான்வழிப்படைகள் புகுந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து 7-வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவ இலக்குகள், பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன் அரசு தங்களை காப்பதற்காக பதில் தாக்குதல் நடத்துவதால் இரு தரப்பிலும் அதிக உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், ரஷ்ய வான்வெளி படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்கிவ் பகுதிக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் நாட்டின் இராணுவப்படை  தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |