உக்ரைனில் கெர்சன் என்ற தெற்கு நகரில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பதாக அந்நகரின் மேயர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ஆறாம் நாளாக போர்த்தொடுத்து வருகிறது. அனைத்து உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தும் போரிலிருந்து ரஷ்யா பின்வாங்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யா, உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தது.
எனினும், ரஷ்யா எல்லைப் பகுதிகளை முற்றுகையிடுவது, அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உத்தரவு, படைகளை குவிப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கெர்சன் என்னும் நகரத்தில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கின்றன. அந்நகரம் ரஷ்ய ராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்நகர் தற்போதுவரை ஆக்கிரமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.