ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டுடனான கருங்கடல் எல்லையை அடைத்து விட்டதாக கூறியிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் ரஷ்ய ராணுவம், எல்லைப்பகுதியை அடைத்து விட்டதாக கூறியிருக்கிறது. ரஷ்ய ராணுவத்தின் அமைச்சகமானது, ரஷ்ய கடற்படைகள் உக்ரைன் நாட்டுடனான கருங்கடலின் எல்லைப்பகுதியை அடைந்திருக்கின்றன.
இதனால், சர்வதேச கடல் வர்த்தகத்தில் உக்ரைன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இனி வரும் நாட்களில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று கூறியிருக்கிறது.