Categories
உலக செய்திகள்

தாய்க்கு சமர்ப்பணம்… ஒரே மூச்சில்180 மீட்டர் ஆழம்… ரஷ்ய வீரர் கின்னஸ் சாதனை!

ரஷ்ய வீரர் ஒருவர் உறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து சென்று கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்று ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் அலெக்ஸி மோல்ச்சனோவ் (Alexey Molchanov). ரஷ்ய நீச்சல் வீரரான இவர் இந்த சாதனை முயற்சியை வெறும் 3 நிமிடத்தில் நிகழ்த்தி அசத்தியிருக்கிறார்.

Image result for Russian freediver Alexey Molchanov sets new Guinness record

குளிர்ந்த நீருக்கு அடியில் அலெக்ஸி  மூச்சு பிடித்து நீச்சலடித்து சாதனை நிகழ்த்தும் போது, ட்ரோன் கேமரா கண்காணிப்பு வளையத்துக்குள், அவரது அணியினரும் விபரீதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்புக்காக உடன் சென்றிருந்தனர்.

Image result for Russian freediver Alexey Molchanov sets new Guinness record

அலெக்ஸுக்கு நீருக்குள் மூச்சு பிடித்து நீச்சலடிப்பது எப்படி என்பது குறித்து அவரது அம்மா கற்று கற்றுக் கொடுக்கும்போது உயிர் விட்டுள்ளார். அதனால் தன்னுடைய தாய்க்கு இந்த சாதனையை சமர்ப்பிக்கிறேன் என்று அலெக்ஸி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |