Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ஏவுகணை தாக்குதல்…. தீப்பிடித்து எரிந்த மின் உற்பத்தி நிலையம்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் சுமார் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் அழிந்து போனது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறி வைத்து ரஷ்யப்படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனால், அங்கு அதிகளவில் தீ பற்றி எரிந்தது. இதில் அந்த மின் உற்பத்தி நிலையம் கடுமையாக பாதிப்படைந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என்று அந்தநகரின் கவர்னராக இருக்கும் ஒலெக்சி குலேபா கூறியிருக்கிறார்.

Categories

Tech |